August 11, 2025
தண்டோரா குழு
தமிழகத்தைப் பொறுத்தவரை தொழில் ரீதியாக தற்போது கோவை நகரம் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட்மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், ரியல் எஸ்டேட் துறையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் 1200 ஏக்கருக்கும் அதிகமான வீட்டு மனை திட்டங்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.இதில் ரூ.750 கோடி மதிப்பிலான 108 ஏக்கர் புதிய திட்டங்கள் நகரின் அதிவேகமாக வளர்ச்சி அடையும் பகுதிகளில் உள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் கோவை நகர மக்களுக்கு சிறந்த மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய வீட்டுமனைகளை குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த விரிவாக்கமானது, எங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
ஜி ஸ்கொயரின் புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள், எல்&டி பைபாஸ், பன்னிர்மடை, காளப்பட்டி, கோவை புதூர், சூலூர், சோமனூர், அத்திப்பாளையம், போத்தனூர், எஸ்ஐஎச்எஸ், பொள்ளாச்சி, வெள்ளக்கிணறு சாலை, நஞ்சுண்டாபுரம், டிவிஎஸ் நகர், நீலாம்பூர், ராமாம்பாறை சாலை, பாலத்துரை சாலை, ராமநாதபுரம், சரவணம்பட்டிபோன்ற முக்கியமான வளர்ச்சி பகுதிகளில் அமைந்துள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அடுத்து வரவிருக்கும் எங்களது வீட்டுமனை திட்டங்களின் ஆரம்ப நிலையிலேயே, தங்களது வீட்டு மனையை முன்பதிவு செய்வதில் அல்லது வாங்குவதில் வாடிக்கையாளர்களிடையே பெரும் ஆர்வம் இருப்பதை எங்கள் நிறுவனம் கண்கூடாக பார்த்து வருகிறது. எங்களது வீட்டுமனை திட்டங்கள் வரவிருக்கும் பகுதிகளில் ஏறக்குறைய 30% முதல் 45% வரை இது போன்ற ஆதரவும் ஆர்வமும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வருவதை காண்கிறோம்.
வாடிக்கையாளர்களிடையே இருக்கும் தேவை அதிகரித்து வருவதால், வீட்டுமனை வாங்குபவர்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்புகள், சந்தையில் நிலவும் போக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் எங்களது நிறுவனம் புதிய திட்டங்களை உருவாக்கி, அறிமுகம் செய்ய வைத்திருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களை கவனத்தில் கோண்டு வீட்டுமனை திட்டங்களை செயல்படுத்த செய்திருப்பதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையின் மேம்பாட்டிற்கும் வழி வகுத்திருக்கிறது.
இந்த ஒவ்வொரு வீட்டு மனைகளும் எந்தவித வில்லங்கமும் இல்லாத தெளிவான ஆவணங்கள், தேவையான அனைத்து அரசாங்க ஒப்புதல்கள் மற்றும் முழுமையாக வளர்ந்த உள்கட்டமைப்புடன் கூடிய பிளக்-அண்ட்-ப்ளே மனைகளாக உள்ளன, இதனால் இங்கு இடம் வாங்குபவர்கள் உடனடியாக வீடு கட்டி குடியேறலாம் அல்லது பாதுகாப்பான முதலீடாக வைத்திருக்கலாம்.
குடும்பங்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தை விரும்புபவர்கள் மற்றும் முதலீட்டைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் தற்போது, ஜி ஸ்கொயர் கோயம்புத்தூர் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டு மனைகளை விற்பனை செய்து வருகிறது.
இது குறித்து ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில்,
கோவை நகரம் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது,எங்களின் 1200 ஏக்கருக்கும் அதிகமான வீட்டு மனை திட்டங்களுடன் தற்போது 750 கோடி ரூபாய்க்கும் அதிகமான எங்களின் புதிய திட்டங்களை நாங்கள் விரிவாக்கம் செய்திருப்பது என்பது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. குறைந்த விலையில் தரமான வீட்டு மனைகளை பல்வேறு அம்சங்களுடன் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
“எங்கள் தொலைநோக்குப் பார்வையானதுவீட்டு மனை திட்டங்களுக்கு அப்பாற்பட்டது –மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும்” என்றும் பால ராமஜெயம் தெரிவித்தார்.