August 4, 2025
தண்டோரா குழு
கோவை கிரெடாய் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் ஆண்டு விழாக்களில் முக்கியமானது “ஃபேர் புரோ 2025” ப்ரொபெர்ட்டி எக்ஸ்போ. இந்த வருடம் ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் கோவை கொடிசியா ஹால் E-யில் சிறப்பாக நடைபெற உள்ளது.
இதுகுறித்து கிரெடாய் கோவை அமைப்பின் தலைவர் எஸ்.ஆர். அரவிந்த் குமார் கூறியதாவது :-
கோவையில் சொந்த வீடுகள் வாங்க விருப்பப்படும் மக்களுக்கு இந்தப் ப்ரொபெர்ட்டி எக்ஸ்போ சிறந்த வாய்ப்பாக அமையும். இந்தக் கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி டெவலப்பர்கள் பங்கேற்கின்றனர். இதில், 100-க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இந்தக் கண்காட்சியில் டெவலப்பர்களைத் தவிர, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சவுத் இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, எச்.டி.எப்.சி வங்கி, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி வங்கிகள் பங்கேற்கின்றனர். இந்த வங்கிகள் மக்களுக்கு தேவையான வீட்டுவசதி கடனை வழங்க உள்ளன. இந்தக் கண்காட்சியின் பிரதான பார்ட்னர் வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது.
கண்காட்சி குறித்து ஃபேர் புரோ 2025 கண்காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல் பேசியதாவது :-
அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், சீனியர் லிவிங் யூனிட்கள், பிளாட்கள் மற்றும் கேட்டட் கம்யூனிட்டிகள் உள்ளிட்ட சொத்துகள் இங்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ரூ.20 லட்சம் முதல் ரூ.7 கோடி வரையிலான விலைகளில் சொத்துகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன.டெவலப்பர்கள் இந்த எக்ஸ்போவிற்காகவே தனிச்சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளனர். என்றார்.
இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ஜெ.எல்.எல்.நிறுவனம்,கோவை ரியல் எஸ்டேட் சந்தை தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடவுள்ளது. அதனை தொடர்ந்து, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நகர வளர்ச்சி குறித்து நிபுணர்களின் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரெடாய் கோவை செயலாளர் சஞ்சனா விஜய்குமார் கூறியதாவது :-
கடந்த ஆண்டு கோவையில் புதிய வீட்டு திட்டங்கள் 52 சதம் அதிகரித்துள்ளன. புதிய அலுவலக கட்டிட திட்டங்கள் 8.6 மில்லியன் சதுர அடிக்கு தொடங்கியுள்ளன.மெட்ரோ ரயில் திட்டம்,விமான நிலைய விரிவாக்கம், மேற்கு பைபாஸ் சாலை ஆகியவற்றால் கோவையின் வளர்ச்சி மிக வேகமாக நடக்கிறது. என்றார். இதனால் கோவையை தவிர நாட்டின் பிறபகுதிகளில் இருந்தும் முதலீட்டாhளர்கள் கோவையில் வீடு அல்லது நிலம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பொருளாளர் கார்த்திக் குமார் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா,உதவி பொது மெலூளர், வீட்டுக்கடன் பிரிவு, கோயம்பத்தூர் வடக்கு பிரவீன், ப்ரொபெர்ட்டி எக்ஸ்போவில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்களை விளக்கினார்கள்.
இக்கண்காட்சிக்கு ஜக்குவார்,காவேரி பாலிமர்ஸ்,புஷ்பிட் ஸ்டீல்ஸ், ரெனாட்டஸ் புரோகான் ஆகியவை கோல்ட் பார்ட்னராக உள்ளனர்;சூர்யதேவ் அலாய்ஸ் அண்டு பவர், வாட்டர்டெக் இந்தியா,ஈகிள் இண்டஸ்ட்ரீஸ், அப்ரூவல் குரு மற்றும் அதானி சிமென்ட் ஆகியவை கார்ப்பரேட் பார்ட்னராக பங்கேற்கின்றன.
இந்த ப்ரொபெர்ட்டி எக்ஸ்போ தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.