August 2, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் மிகப்பெரிய மிக நம்பகம் வாய்ந்த வீட்டுமனை வர்த்தக நிறுவனமான ஜி ஸ்கொயர், தங்கள் ட்ரீம் ஸ்கொயர் திருவிழாவை அறிவிப்பதில் பெருமிதமடைகிறது.
ஜி ஸ்கொயரின் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான பால ராமஜெயம் பேசும்போது, வீட்டுத்திட்டங்களில் புரட்சிகரமான கற்பனையும், கட்டிடக் கலையும் சந்திக்கும் நிகழ்ச்சி இது. இத்திருவிழா மூலம் வீடுகளை வாங்குபவர்கள் தங்களது எதிர்கால வீடுகளை தாங்களே விரும்பும் வண்ணம், வார இறுதியை பயனுள்ள வகையில் வடிவமைக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்தியாவில் முதல்முறையாக, கோயம்புத்தூரிலேயே, வீட்டு விற்பனை, வீடு வடிவமைப்பு, மக்கள் கூடிச்சேர்ந்து வாழும் மறக்கமுடியாத திருவிழாவை ஜி ஸ்கொயர் கோவை வாழ் குடும்பங்களுக்கு வழங்குகிறது.வீட்டு வடிவமைப்பு, வீடுகளை வாங்குவது,கொண்டாட்டம் என தனித்துவமனான மூன்று தூண்களின் மீது ட்ரீம் ஸ்கொயர் திருவிழா நிகழ்கிறது. இத்திருவிழாவுக்கு வருபவர்களுக்கு அரிய வாய்ப்பாக அவர்களது கனவு இல்லத்தின் லே அவுட்டை வடிவமைக்கும் வாய்ப்பு நிகழ்விடத்திலேயே வழங்கப்படுகிறது.
கட்டிடவியல் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் முற்றிலும் இலவசமாக இந்த அனுபவம் கிடைக்கிறது.ஒரு கட்டிடத்தை நிஜமான இல்லமாக மாற்றவிரும்பும் குடும்பங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட முதல் நிகழ்ச்சி இது.ப்ரீமியம் வீட்டுமனைகளை இணையற்ற சந்தைவிலையில் எதிர்காலத்தில் வீடுகட்டக்கூடிய வசதிகளுடன் வாங்குவதற்கும் இத்திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வீட்டுமனைகளை புக் செய்பவர்களுக்கு ஜி ஸ்கொயர் 50% தள்ளுபடி வழங்குகிறது. அத்துடன் இலவச மின்சார பைக்கையும் ஸ்பாட் புக்கிங் பரிசாக வழங்குகிறது.இதன்மூலம் இந்த ஆண்டிலேயே மிகச்சிறந்த வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கும் ரியல் எஸ்டேட் திருவிழாவாக மாற்றுகிறது.இதுபோன்ற உற்சாகமான பரிசுகளோடு, ட்ரீம் ஸ்கொயர் திருவிழா நடைபெறும் முழுநாளும் பிரமாண்டமான அனுபவத்தை வழங்கவுள்ளது.
இத்திருவிழாவில் பொழுதுபோக்கு, அறுசுவை உணவுகள் மற்றும் எல்லா வயதினரும் பங்கேற்கும் வகையிலான நிகழ்ச்சிகள் முழுக்குடும்பத்தினருக்கும் நினைவுகூரத்தக்க நிகழ்வாக இருக்குமென்று உறுதியேற்கிறோம்.