August 1, 2025
தண்டோரா குழு
தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நான்கு பெரும் கண்காட்சிகள் – WAREMAT (கிடங்கு மற்றும் பொருள் கையாளல் கண்காட்சி),TOPACK (மொத்தப் பாக்கேஜிங் கண்காட்சி), TOPLAST (மொத்த பிளாஸ்டிக் கண்காட்சி), AUTOROBOT (ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் கண்காட்சி) – இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகம் A மற்றும் B அரங்குகளில் இன்று தொடங்கின. இந்த கண்காட்சிகள் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை நடைபெறுகிறது.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக சிஐஏ தலைவர் தேவகுமார் நாகராஜன்,எம்எஸ்எம்இ (டிஎப்ஒ) உதவி இயக்குநர் சி.பி. ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி குறித்து மெட்ராஸ் டச் ஈவன்ஸ் மற்றும் ட்ரேட் பேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் கூறுகையில்,
இந்த 4 கண்காட்சிகளின் பிரதான குறிக்கோள் தொழில்துறை வளர்ச்சிக்கும், புதுமைக்கும், வணிக இணைப்புகளுக்கும் ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும்.மேலும் கிடங்கு மேலாண்மை, பொருள் கையாளல், பாக்கேஜிங், பிளாஸ்டிக், ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் துறைகளில் முன்னோடி தீர்வுகள் கிடைக்க சமீபத்திய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துகிறோம்.
கண்காட்சி நிறுவனங்களுக்கும், வணிகக் கையாளர்களுக்கும் இடையே வணிக ஒப்பந்தங்கள் ஏற்படுத்த நேரடி வணிக பரிமாற்றங்களை உருவாக்கிறோம்.
B2B நெட்வொர்க்கிங் வாய்ப்பு: நாட்டின் முக்கிய முடிவெடுப்பாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் வணிக நிபுணர்களை ஒன்றிணைத்து வணிக வாய்ப்புகளை உருவாக்குதல்.
தொழில்துறை மேம்பாட உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களை முக்கிய துறைகளின் இறுதி பயனாளர்களுடன் இணைக்கிறது.
• 150-க்கும் மேற்பட்ட நிறுவங்களின் பங்கேற்று உள்ளது.
• 200-க்கும் மேற்பட்ட தொழில்துறை தயாரிப்புகள் மற்றும் நேரடி டெமோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
• 10,000-க்கும் அதிகமான தொழில் நிபுணர்கள் மற்றும் வணிக பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்கிறோம்.
• ₹85 கோடி மதிப்பிலான வணிக பரிமாற்றங்கள் நிகழும் என தெரிவித்தார்.
இந்த கண்காட்சிகளில் நாட்டின் முன்னணி நிறுவனங்களும், சர்வதேச பிராண்டுகளும் பங்கேற்றுள்ளன. 300-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் முனைவோர் மற்றும் வணிக பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.