• Download mobile app
02 Jan 2026, FridayEdition - 3614
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?

July 12, 2025 தண்டோரா குழு

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ரூ.800 கோடி செலவில் பான் இந்தியா அளவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்திற்காக ஹாலிவுட் நட்சத்திரம் வில் ஸ்மித்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க