• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆடி கார் ஷோரூம் நிறுவனம் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட்டில் அவர்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி

June 30, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ஆடி கார் ஷோரூம் நிறுவனம் வருடம் தோறும் அவரது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.இந்த வருடம் வாடிக்கையாளர்களைமகிழ்விக்கும் நிகழ்ச்சியானது வாளையாறு பகுதியில் உள்ள வின்னர்ஸ் ஹில் ரெசார்டில் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட் நிறுவனர் சி.கே.கண்ணன் தலைமையில் நடைபெற்றது, சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடி கார் வாடிக்கையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு இந்த ரெசார்ட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்று சி.கே.கண்ணன் விளக்கிக் கூறினார். மேலும் வாடிக்கை யாளர்களை அவரே ஜீப்பில் அழைத்து சென்று ஆஃப் ரோடு ரைடு நடத்திக் காட்டினார். மேலும் அவர் பேசுகையில், இயற்கை எழிலுடன் அமைந்த மலைப்பகுதி,குழந்தைகள் விளையாடக்கூடிய பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட அறைகள், ஹார்ஸ் ரைட்,சுமார் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சமைக்கும் நவீன உணவுக்கூடம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது என கூறினார்.

மேலும் இங்கு வந்த ஆடி கார் வாடிக்கையாளர்கள் கூறும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கறது எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்த கோயம்புத்தூர் ஆடி கார் நிறுவனத்திற்கும், வின்னர்ஸ் ஹில் ரெசார்ட்டிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

நிகழ்ச்சியில் கோவை ஆடி கார் ஷோரூம் ஜெனரல் மேனேஜர் விவேக் மற்றும் ஆடி கார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க