• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தான் கேப்டன் அசார் அலிக்கு அபராதம்!

January 28, 2017 tamilsamayam.com

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இத்தொடரை 4-1 என பாகிஸ்தான் அணி இழந்தது.

இதன் கடைசி போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமும், ஒரு போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

அணியின் மற்ற வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தோல்வி எதிரொலி காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலக அசார் அலி யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க