• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈமு கோழி மோசடி வழக்கு: சுசி ஈமு பார்ம்ஸ் மேலாண் இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

January 29, 2025 தண்டோரா குழு

கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து ரூ.19 கோடி மோசடியில் ஈடுபட்ட சுசி ஈமு பார்ம்ஸ் மேலாண் இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மோசடி செய்த தொகையான ரூபாய் 19.02 கோடி அபராதம் -கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் குருசாமி.இவர் பெருந்துறையில் சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி,கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தினார். முதல் திட்டத்தில்,ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழி குஞ்சுகள் அளித்து, தீவனம்,கொட்டகை அமைத்துக்கொடுத்து,பராமரிப்பு தொகையாக 1.5 ஆண்டுகளுககு மாதம் ரூ.6ஆயிரம், ஆண்டு போனஸாக ரூ.20ஆயிரம், அளிக்கப்படும்,1.5 ஆண்டுகள் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் என்று 3 திட்டங்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினர்.

சுசி அலுவலகத்தின் கிளை அலுவலகத்தில் ஒன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்ட நிலையில்,1087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 19 கோடியே 02 லட்சம் மோடி செய்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில், மோசடி செய்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, மோடி செய்த தொகையான ரூபாய் 19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க