• Download mobile app
18 Jan 2026, SundayEdition - 3630
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பான்பிகோ பின்டெக் மென்பொருள் நிறுவனம் கோவையில் விரிவாக்கம்

January 22, 2025 தண்டோரா குழு

இலண்டனை தலைமையகமாகக் கொண்ட பின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான பான்பிகோ,கோவை பீளமேட்டில் தனது புதிய அலுவலகத்தை திறந்து செயல்பாடுகளை விரிவுபடுத்துவதாக இன்று அறிவித்தது.

ஐரோப்பா,அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு சேவை வழங்கும் இந்த வளர்ந்து வரும் நிறுவனத்தின் விரிவாக்க நிகழ்ச்சி முக்கிய அரசியல் தலைவர்களின் முன்னிலையில் இன்று கோவையில் நடைபெற்றது.

அஇஅதிமுக கழக தலைமை நிலையச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான எஸ்.பி. வேலுமணி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுன்,கே ஆர் ஜெயராம் & அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் அ.கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பான்பிகோவின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கண்ணன் இராசப்பன் மற்றும் மூத்த இயக்குனர் டி. செல்வாம்பிகை ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கி விருந்தினர்களை வரவேற்றனர்.

விழாவில் பேசிய வேலுமணி,

பான்பிகோவின் மென்பொருள் தயாரிப்புகள் இந்தியாவின் யுபிஐ ( UPI ) முறைமைக்கு இணையானது என்றும்,நிறுவனத்தின் ஓபன் பாங்கிங் மென்பொருள் தீர்வுகள் வங்கித் தொழில்நுட்பத்தின் சமீபத்திய பரிணாமம் என்றும் குறிப்பிட்டார்.ஆறு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று முக்கிய உலக வங்கிகளுக்கு சேவை வழங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதை அவர் பாராட்டினார். வேலுமணி,கோவையின் தொழில்முனைவு பாரம்பரியத்தையும் , தகவல் தொழில்நுட்பத் துறையில் அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

“கோவையின் தரமான கல்வி மற்றும் கலாச்சார மதிப்புகள் தொடர்ந்து முக்கிய நிறுவனங்களை நமது நகரத்திற்கு ஈர்த்து வருகிறது, ” என்று அவர் தெரிவித்தார்.

கண்ணன் இராசப்பன், இந்த விரிவு படுத்தப்பட்ட அலுவலகம் 2025 வரை பான்பிகோவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் என்று அறிவித்தார். தற்போது கோவையில் 50 பணியாளர்களைக் கொண்ட நிறுவனம், உள்ளூர் கல்லூரிகளில் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதுடன், அனுபவம் வாய்ந்த நிபுணர்களையும் பணியமர்த்தும் . ” கோவையிலிருந்து எங்கள் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு புதுமையான , நவீன மென்பொருள் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,
என்று கண்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க