• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவாவில் சிறைக் கலவரத்தில் கைதி பலி, 11 பேர் காயம்

January 25, 2017 தண்டோரா குழு

கோவாவில் சிறைச்சாலையை உடைத்து வெளியேறக் கைதிகள் முயன்றபோது கலவரம் ஏற்பட்டது. அதில், முயற்சியின் போது ஏற்பட்ட கலவரத்தில் ஒரு கைதி குத்திக் கொல்லப்பட்டார், காவலர்கள் உள்பட 11 பேர் படு காயமடைந்துள்ளனர்.

இது குறித்து சிறைச்சாலை கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சித்திவிநாயக் நாயக் செய்தியாளர்களிடம் புதன்கிழமை (ஜனவரி 25) கூறியதாவது:

“கோவாவின் கிளைச் சிறையில் 49 கைதிகள் சேர்ந்து சிறைச்சாலையில் கலவரத்தைத் தூண்டிவிட்டார். இதில் ஒரு கைதி குத்திக் கொல்லப்பட்டார். 2 சிறைக் காவலர்கள் மற்றும் 9 பேர் படு காயமடைந்தனர்.

கடந்த ஜூலை மாதம் ஒரு கொலை வழக்கில் தண்டனைக்கு ஆளான கைதி விநாயக் கோர்பட்கர் என்பவர் வட கோவாவில் உள்ள கால்வல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை அச்சிறையில் இருந்து தெற்கு கோவாவில் உள்ள வாஸ்கோ நகரின் சாதாரண கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார். அவரைச் சிலர் சிறையில் 11 மணியளவில் குத்திக் கொன்றனர்.

இந்தக் கலவரத்தின் போது காயமடைந்த சிறைக் காவலர் விட்டல் கவாஸ் மற்றும் சிறைப் பாதுகாப்பு வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிறைச்சாலையின் பாதுகாப்பு வளையத்தை, உடைத்து கைதிகள் சிறையின் பிரதான வாயிலுக்குச் சென்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அங்கு விரைந்தனர். அவர்களைச் சேதமடையாத சிறையில் அடைத்தனர். கோவா மருத்துவக் கல்லூரியில் ஐந்து கைதிகளும், சிக்காலிம் மருத்துவமனையில் நான்கு கைதிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க