• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு வங்கம் பேருந்து விபத்து 5 பலி 3 பேர் காயம்

January 23, 2017 தண்டோரா குழு

மேற்கு வங்கம் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து மேற்கு வங்கம் மாநிலம் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 22) கூறியதாவது:

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தின் தரிபத் என்னும் இடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கிளம்பிய பேருந்து வரும் வழியில் ஒரு கால்வாயில் கவிழ்ந்தது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படு காயம் அடைந்த 3 பேரையும் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அப்பேருந்தின் ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார். பேருந்தின் நடத்துநர் கைது செய்யப்பட்டார். இது குறித்து, விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், தப்பிச் சென்ற பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகிறோம். விரைவில் விரைவில் அவரைக் கைது செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க