• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீட்டாவை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்

January 22, 2017 தண்டோரா குழு

பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பழ.நெடுமாறன் எழுதிய வள்ளலார் மூட்டிய புரட்சி நூல் வெளியீட்டு விழாஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட பழ.நெடுமறான் செய்தியாளர்களிடம் கூறியதாவது; “ தமிழகத்தில் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஒரு பெரும் புரட்சியை நடத்தி இருக்கிறார்கள், இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள் என்று கருதக்கூடாது.

தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது. காவேரி, முல்லைப்பெரியாறு, இலங்கை தமிழர் பிரச்சனையில்மத்திய அரசாங்கம் தமிழகத்திற்க்கு வஞ்சனை செய்கின்றனர்.இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் இருந்த கொதிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

பீட்டா அமைப்பு தடை செய்ய வேண்டும் என்று மாணவர்களின் கோரிக்கை நியாயமானது பீட்டா அமைப்பு ஒரு அன்னிய நாட்டு அமைப்பு ஆகும், அன்னிய நாட்டுப்பணம் நம் நாட்டிற்க்கு வரக்கூடாது என்று மத்திய அரசு சொல்கிறது. வெளிநாடுகளிலிருந்து தன்னார்வு தொண்டு நிறுவணம் மூலம் நம் நாட்டிற்க்கு வரும் பணத்தை மத்திய அரசு தடை செய்தது.

அதே நேரத்தில் பீட்டா அமெரிக்காவில் தலைமை இடமாக கொண்டு இங்கு கிளை அமைத்து செயல்படுகின்றனர் அவர்களுக்கு பணம் எப்படி வருகின்றது ?தமிழகத்தில் நாட்டு மாட்டை ஒழித்துவிட்டு, ஜெர்சி மாட்டை இறக்குமதி செய்வதற்க்காகவே பீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கினர். இப்படிப்பட்ட பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க