• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாப்பீஸ் டவர் ஹோட்டலில் கேக் கலவை கலக்கும் திருவிழா

November 6, 2023 தண்டோரா குழு

கோவை பாப்பீஸ் டவர் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் திருவிழா நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.

இந்நிலையில்,கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்களுக்கான மூலப் பொருள்கள் கலக்கும் திருவிழா கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பாப்பீஸ் டவர் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் கேக் தயாரிக்க தேவையான முந்திரி,உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலந்து கேக் மிக்சிங் கலக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாப்பீஸ் டவர் நிறுவன பொது மேலாளர் பிரதீப், ஆப்ரேஷன் மேலாளர் பார்த்திபன்,மேலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்தக் கலவை கிறிஸ்துமஸ் வரை காற்று புகாத பைகளில் அடைத்து வைத்து, கேக் தயாரிக்கப்படும்.

மேலும் படிக்க