இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்ட போது மீண்டு வருவது பற்றிய நம்பிக்கையை இழந்துவிட்டதாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பிடித்தார் யுவராஜ் சிங். நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய அவர் தசம் விளாசினார். வழக்கமான தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய யுவராஜ் 127 பந்துகளில் 150 ரனகள் குவித்தார்.
தனது இந்த சதம் பற்றி பேசிய அவர், தான் விளையாடிய சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளார். மேலும், புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்த பிறகு அணியில் இருந்து விலக்கப்பட்ட போது மனமுடைந்து நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தித்தாள், தொலைகாட்சி எதையும் பார்க்காமல் முழுவதும் பயிற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். ரஞ்சிக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடிக்க விரும்பினேன். எனக்கான நேரம் வரும் வரை காத்திருப்பதற்கு முடிவுசெய்தேன்.
தோனியுடன் இணைந்து விளையாடுவது பற்றி கூறிய அவர், “நானும் தோனியும் இணைந்து இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றி தேடித்தந்திருக்கிறோம். அனுபவம் மிக்க வீரரான அவர் விளையாடுவதைப் பார்ப்பது சிறப்பான அனுபவம்” என்று கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு