• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட் சிட்டியில் கோவைக்கு முதலிடம்

September 23, 2023 தண்டோரா குழு

கோவை ஸ்மார்ட் சிட்டி, திட்டங்களில் ஆர்.எஸ்.புரம், பந்தைய சாலை போன்ற பகுதிகளில் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தல், வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல், பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி பில்ட் எண்விரான்மென்ட் பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளது.

வரும் 27ம் தேதி புதன் கிழமை அன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தோரில் நடைபெறும் விழாவில் மேதகு இந்திய குடியரசு தலைவர் அவர்களிடமிருந்து கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் விருதை பெற்றுக்கொள்ள உள்ளார்.

மேலும் படிக்க