• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனி மகிழ்ச்சியாக உள்ளார்-எல்ஜிஎம்(LGM) படக்குழுவினர் பேட்டி

July 31, 2023 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் எல்ஜிஎம்(LGM) படக்குழுவின் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா ஆகியோர் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்,

கோவையில் வருவது மிகப்பெரிய சந்தோஷம் எங்களுடைய படம் இங்கே வெளியாகி உள்ளது.தமிழ்நாடு மற்றும் அனைத்து இடங்களிலும் குடும்பங்கள் அனைவரும் இந்த படத்தை மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர்.நல்ல நல்ல கருத்துக்கள் வருகிறது.

கோவை பொறுத்த வரை அன்பானவர்கள் என தெரிவித்தார். படம் பார்க்காதவர்கள் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள், பொதுமக்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகிறது.தோனி படம் என்பதால் தோனி மகிழ்ச்சியாக உள்ளார் என அவர்களது டீம் கூறினார்கள். நாங்கள் இந்த படத்தில் நடித்தது வெற்றியாக பார்க்கிறோம்.

இவனா நதியா கெமிஸ்ட்ரி முழுமையாக உள்ளது என பொது மக்களிடம் கருத்துகள் வருகிறது என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய நடிகை இவானா,நாங்களும் ரசிகர்களுடன் படம் பார்த்தோம் படம் பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க