உடல் எடையை குறைக்க விராட் கோலி எடுத்த முடிவு மிகச்சரியானது என டேவ் வாட்மோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி, 350 ரன்கள் குவித்த போதும் இளம் கோலியுடன், கேதர் ஜாதவ் கைகோர்த்து இங்கிலாந்து பவுலர்களை சுளுக்கெடுக்க, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது எடையை குறைக்க எடுத்த முடிவு மிகச்சரியானது என தேவ் வாட்மோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாட்மோர் கூறியது:
விராட் கோலி தலைமை பொறுப்பு ஏற்றுக்கொண்ட முதல் போட்டியிலேயே தனது தலைமை திறமையை நிரூபித்துள்ளார். அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என எடுத்த முடிவே அவரின் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்த முடிவு. அப்போது தான் ஒருவர் மனவலிமையுடன் செயல்பட முடியும். அது வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும்.
இவ்வாறு வாட்மோர் கூறினார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்