• Download mobile app
24 Feb 2026, TuesdayEdition - 3667
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டை அரசே முன்னின்று நடத்தியிருக்க வேண்டும்

January 18, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழக அரசே முன்னின்று நடத்தியிருக்க வேண்டும். அதனால், நீதிமன்ற அவமதிப்பு வந்தாலும், அதைத் சந்தித்திருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

“கடந்த காலங்களில் காந்தி, அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது தமிழகத்தில் ஏராளமான கைதிகள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் தமிழக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதே போல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்ய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், தமிழக அரசு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்தில் கடும் வறட்சியால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். வறட்சி காரணமாக கடன் தொல்லைகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதியாக தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி நடைபெறும் போராட்டங்களை தமிழக அரசு சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையாக பார்க்காமல் தமிழகத்தின் பாரம்பரிய, கலாசார விழாவாகப் பார்க்க வேண்டும். ஆந்திரப் பிரதேசத்தில் உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசே முன்னின்று நடத்தியிருக்க வேண்டும். அதனால் நீதிமன்ற அவமதிப்பு வந்தாலும், அதை சந்தித்திருக்க வேண்டும். சர்வதேச பின்னணியில் செயல்படும் பீட்டா அமைப்பு, நமது பாரம்பரிய விழாவுக்கு தடை ஏற்படுத்துவது வருத்தம் அளிக்கிறது“.

இவ்வாறு தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க