• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற பா.ஜ.க இளைஞரணி மாவட்ட செயற்குழு கூட்டம்

June 25, 2023 தண்டோரா குழு

பா.ஜ.க இளைஞரணி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் இளைஞரணி மாவட்ட செயற்குழு கூட்டம் கோவை ராம்நகரில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பா.ஜ.க கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்ட தலைவர் அசோக் குமார் முன்னிலை வகித்தார்.

மாநில துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கனகசபாபதி சிறப்புரை ஆற்றினார்.இளைஞரணி மாவட்ட பார்வையாளர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தார் சாலைகளும் மிகவும் மோசமான நிலையிலும் குண்டும், குழியுமாகவும் உள்ளன. எனவே, பழுதான சாலைகளை உடனடியாக
சீரமைக்க வேண்டும்.

பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ், பிரதேவ்,முருகானந்தம்,மாவட்ட நிர்வாகிகள், மற்றும் மண்டல் மையக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க