• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார் ஓட்டுநர்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் ஜேகே டயர் நிறுவனம் நடத்தும் ரேஞ்ச் ஒடிசி பேரணி

June 11, 2023 தண்டோரா குழு

பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான ஜேகே டயர் பல்வேறு கார்பந்தய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் இந்நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் புதிய சாகச மனப்பான்மையை விரும்பும் ஓட்டுநர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினரை மகிழ்விக்கும் வகையிலும் குடும்பத்துடன் பங்கேற்கும் ரேஞ்ச் ஒடிசி எனும் கார் பேரணியை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சி முதல் முறையாக கோவையில் துவங்கியது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தப் கார் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் ,கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.இந்தப் பேரணியில் நேரம் வேகம் மற்றும் தூரம் ஆகியவை கணக்கிடப்படும். மேலும் இந்த போட்டியில் சரியான வேகம் மற்றும் நிறத்தை ஓட்டுநர்கள் மற்றும் வழிகாட்டிகள் பின்பற்றுகிறார்கள் என்பதும் சோதிக்கப்படுகிறது.

இந்த பேரணி இனி வரும் நாட்களில் புனே, ஐதராபாத், கொச்சின், சண்டிகர், குர்கான் ஆகிய இடங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜேகே டயர் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க