• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா காய்கறி மார்க்கெட்டை காப்பாற்றுங்கள் – வியாபாரிகள் கோரிக்கை

May 22, 2023 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வளாகத்தில் சாலை வசதிகள், வாகனங்கள் வந்து செல்வதற்கான வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணி சில தினங்களில் துவங்கப்பட உள்ளதாகவும் எனவே இந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகளும் பணிகள் முடியும் வரை கவுண்டம்பாளையம் அருகே உள்ள எருகிடங்கு மைதானத்தில் தற்காலிக கடைகளை அமைத்துக் கொள்ளும்படி கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் நோட்டீஸ்க்கு அண்ணா தினசரி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து அண்ணா மார்க்கெட் சங்க தலைவர் சந்திரன் கூறுகையில்,

எருகிடங்கு மைதானத்தில் கடைகளை அமைத்தால் வியாபாரம் நடைபெறாது எனவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படையும் எனவும் தெரிவித்தார்.ஏற்கனவே எம்ஜிஆர் மொத்த காய்கறி மண்டியிலும் சில்லறை வியாபாரங்களும் துவங்கி விட்டதால் அண்ணா தினசரி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தங்களை இந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றினால் தற்போது கிடைக்கும் வருமானமும் இழக்கக்கூடும் என தெரிவிக்கின்றனர்.

இன்று மனு அளித்து உள்ளோம் வியாபாரிகளுக்கு ஆதரவாக நிர்வாகம் முடிவு எடுக்க வில்லை என்றால் அடுத்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த நோட்டீசை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க