• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 12 வயது சிறுமி மாயம் – இரண்டு தனி படைகள் அமைத்து போலீசார் விசாரணை

May 18, 2023 தண்டோரா குழு

12 வயது பெண் குழந்தை மாயம்: இரண்டு தனி படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறை தேடி வருகின்றது.

கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன் என்பவரது 12 வயது சிறுமி மகள் ஸ்ரீநிதி. 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் வீட்டு அருகே விளையாடு கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மாயமானார்.இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு தனி படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த பேருந்து சென்ற பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு செய்த போது அவர் எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை.

மேலும் அவருக்கு சக்கரை நோய் இருப்பதாகவும் அதற்கு (மருந்து) ஊசி எடுத்துக் கொண்டு உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க