• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தல’ ஸ்டைல் ‘தளபதி’ ஸ்டைல் வேற வேற இல்ல!

January 17, 2017 tamilsamayam.com

இந்திய கேப்டன்கள் தோனிக்கும், கோலிக்கும் தலைமை பொறுப்பில் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை, என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி , 350 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி, யுவராஜ், தோனி உட்பட 63 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது

பின்னர் கோலியுடன், கேதர் ஜாதவ், ஜோடி சேர்ந்து, இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இவர்கள் விட்டுச்சென்ற பணியை பாண்டியா, அஷ்வின் ஜோடி சிறப்பாக முடித்து வைத்தது. இந்த வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில்,’ கேப்டன் தோனிக்கும் கோலிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. கேப்டன் பொறுப்பில் கோலியும், தோனியும் ஒரேமாதிரியாக தான் செயல்படுகின்றனர். கோலி களத்தில் எல்லா வீரர்களுக்கும் கைகொடுப்பார். தோனியும் அதே போல தான். கோலி ஒரு பவுண்டரி அடித்த பின் அருகில் வந்து ரன்வேகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என சொல்லுவார்.என்றார்.

மேலும் படிக்க