• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சிக்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கல்

April 21, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 176 புதிய குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார். கோவை மாநகராட்சியில் நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் குப்பைகளை கொட்டும் பொழுதும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்டுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகளை எடுப்பதற்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு மேலும் புதிய 176 குப்பை தொட்டிகளுடன் கூடிய 44 தள்ளுவண்டிகளை மத்திய மண்டலத்தின் 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர்கள் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

இதிலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க