• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் அண்ணாமலை தற்போது மெகா காமெடி பீஸ்ஸாக உள்ளார் – ஜவாஹிருல்லா

April 18, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

‘‘ஜம்மு காஷ்மிரின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் புல்வாமா தாக்குதல் குறித்தும் கோவா மாநில அரசின் ஊழல்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் கூறியுள்ளதாக பேசப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஊழலுக்கு எதிரானவர் அல்ல மோடி எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனை பற்றி அண்ணாமலை ஒரு கருத்து கூட தெரிவிக்கவில்லை.

ஆனால் திமுகவின் ஊழல் பட்டியல் என சொல்லி சொத்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றால் ஏன் வருமான வரித்துறையிடமோ, தேர்தல் ஆணையத்திடமோ அதை ஒப்படைக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. அண்ணாமலை இது போன்று எதாவது செய்தால் தான் தினமும் நாளிதழ்களில் செய்தி வரும் என்பதற்காக செய்கின்றார். தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியல் அண்ணாமலை தற்போது மெகா காமெடி பீஸ்ஸாக உள்ளார்,’’ என்றார்.

மேலும் படிக்க