• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல் இனவிருத்தி ஆராய்ச்சியாளர் இராமையாவுக்கு இருக்கை உருவாக்கம்

April 13, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல் இனவிருத்தி ஆராய்ச்சியாளர் இராமையா இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் நெல் ஆராய்ச்சி நிலையமான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நெல் இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம் 1912 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகப் புகழ்பெற்ற நெல் ஆராய்ச்சியாளரான டாக்டர் கே. இராமையா இந்த நிலையத்தில் 24 ஆண்டுகள் (1914-1938) சேவையாற்றியுள்ளார். பன்முகத்திறன் கொண்ட டாக்டர் இராமையா வேளாண் ஆராய்ச்சியாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார்.

மேலும் இவர் ஒடிசா மாநில கட்டக்கில் உள்ள தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் இந்தியாவின் நெல் கலப்பின இனப்பெருக்க ஆராய்ச்சியின் முன்னோடியாவார். இவரது முனைப்பான ஆராய்ச்சியின் மூலம் மசூரி மளிஞ்சா (மலேசியா ரகங்கள்), ஏ.டீடி 27 (இந்தியா) மற்றும் சிர்க்னா (சீனா) போன்ற உயர் விளைச்சல் ரகங்கள் உருவாக்கப்பட்டன. இவரால் கண்டறியப்பட்ட ஜ இ பி 24 (கிச்சிலி சம்பா) ரகம், உலகம் முழுவதும் சுமார் 83 புதிய ரகங்களின் உருவாக்கத்திற்கு முன்னோடியாக விளங்கியது.

இந்தியா அரசாங்கம் இவருக்கு பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் வழங்கியுள்ளது. மூலம் இவரது சேவையை கௌரவித்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் டாக்டர். இராமையா நினைவாக பயிர் மரபணு வளங்களின் களஞ்சியமாக ராமையா மரபணு வங்கியை 2009ம் ஆண்டு உருவாக்கியது. மேலும் நெல் இனவிருத்தி நிலையத்தில் இவரது திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுதல் என்ற கனவை கொண்டிருந்தார் இராமையா. டாக்டர். இராமையாவின் கனவை நினைவாக்கும் வகையில் அவரது மகன் பஞ்சரத்தினம் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இராமையா இருக்கையை உருவாக்குவதற்காக ரூ.5 கோடியை வழங்கியுள்ளனர். இதன் படி இராமையா இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தொகையானது பல்கலைக்கழகத்தின் நிதிய மூலதனமாக பராமரிக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியானது ஆராய்ச்சி நிதியாக பயன்படுத்தப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், டாக்டர். வெ. கீதாலெட்சுமி இந்த நன்கொடையை வழங்கிய டாக்டர் ராமையாவின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க