• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி துணை கமிஷனராக சிவக்குமார் பொறுப்பேற்பு

April 5, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள துணை கமிஷனர் பதவிக்கு ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த சிவக்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய என 5 மண்டலங்கள் உள்ளன. சுமார் 6500 தெருக்கள் உள்ளன.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வரியினங்கள் உள்ளன.சென்னைக்கு அடுத்து வருவாயில் கோவை மாநகராட்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. 15 லட்சம் குடும்பங்கள் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.

கோவை மாநகராட்சியின் நிர்வாக சுமையை குறைப்பதற்காக கூடுதலாக துணை கமிஷனர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள துணை கமிஷனர் பதவிக்கு ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த சிவக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க