• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிவிட்டரை விட்டு நடையைக் கட்டிய திரிஷா..!

January 16, 2017 tamil.samayam.com

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருவதால்,தனது டிவிட்டர் கணக்கை டி-ஆக்டிவேட் செய்துள்ளார் நடிகை திரிஷா.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் காரணமான பீட்டா அமைப்பின் ஆதரவாளர் என்று கூறி,சமூக வலைத்தளங்களில் நடிகை திரிஷா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து “நான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்ததில்லை.ஆனால் என்னை பற்றி பலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.”என திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர்,”நான் ஒரு தமிழன்.நான் பீட்டாவை ஆதரிக்கிறேன்.எவ்வளவு பழமையான பாரம்பரியமாக இருந்தாலும்,மிருகங்கள் வதைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது.”என திரிஷா மற்றொரு டிவீட் செய்திருந்தார்.அதன் பின்னர்,”என்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள்.பீட்டாவுக்கு ஆதரவாக நான் எந்த டிவீட்டும் போடவில்லை.”என ஜகா வாங்கினார்.

இருப்பினும் அவருக்கு எதிரான வசவுகள் சமூக வலைத்தளங்களில் குறையவில்லை.எனவே தனது டிவிட்டர் கணக்கை தற்காலிகமாக மூடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.”அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும் வரை,எனது டிவிட்டர் கணக்கை மூடுகிறேன்.”என திரிஷா தெரிவித்துள்ளார்.இதன்படி தற்போது திரிஷாவின் டிவிட்டர் கணக்கு செயல்படவில்லை.

மேலும் படிக்க