• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 5 மாதம் கர்ப்பமான கல்லூரி மாணவி உயிரிழப்பு

April 4, 2023 தண்டோரா குழு

கோவையில் கடுமையான வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவி பலியானார். பரிசோதனையில் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி.இவர் சரவணம்பட்டியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎட் படித்து வந்தார். இந்நிலையில்,கடந்த சில நாட்களாக அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதையடுத்து அவர் தனது தோழி ஒருவரை அழைத்து கொண்டு ஆட்டோவில் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது.இதனால் டாக்டர்களின் பரிந்துரையின்படி மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மேலும் உயிரிழந்த மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது.இது தொடர்பாக அவரது பெற்றோருக்கும்,சரவணம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க