• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கு பல்நோக்கு மருத்துவ மையம்

March 29, 2023 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பல்நோக்கு மருத்துவ மையம் இன்று தொடங்கப்பட்டது.இங்கு வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 வரை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்க சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சிகிச்சை மையத்தில் தோல்நோய், பிளாஸ்டிக் சர்ஜரி, சிறுநீரக அறுவை சிகிச்சை, மனநோய், மகப்பேறு மற்றும் காது,மூக்கு, தொண்டை டாக்டர்கள் கொண்ட சிறப்பு குழு ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க உள்ளனர்.இதுவரை மூன்றாம் பாலினத்தவர்கள் வெவ்வேறு சிகிச்சைப் பிரிவிற்கு சென்று ஆலோசனை பெறவேண்டி இருந்தது.ஆனால் தற்போது அவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பல்நோக்கு சிகிச்சை மையம் அவர்களின் மருத்துவ தேவையை ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.இந்த சிகிச்சை தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மற்றும் இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது.

மேலும் படிக்க