• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

95வது வார்டில் ரூ.48 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

March 27, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் புதியதாக தார் சாலை அமைத்தல், சாலைகளை சீர்செய்தல் உள்ளிட்ட சாலைப்பணிகள் முழு வீச்சல் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி 95வது வார்டுக்குட்பட்ட போத்தனூர் கருப்பராயன் கோவில் வீதி முதல் மதீனா நகர் வரை ரூ.48 லட்சத்தில் புதியதாக தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைவார்கள்.

மேலும் உக்கடம் வருவதற்கும், பாலக்காடு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கும் உள்ள மெயின் ரோடுகளை இணைக்கும் சாலையாக இந்த பகுதி சாலை உள்ளது.

இதுகுறித்து 95வது வார்டு கவுன்சிலர் அப்துல் காதர் கூறுகையில்,

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இச்சாலை அமைக்கப்படவில்லை. தற்போது தான் இச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாநகராட்சி முழுவதும் அனைத்து சாலைப்பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, என்றார்.

மேலும் படிக்க