• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நீதிமன்றம் அருகே மனைவி மீது கணவன் ஆசிட் வீச்சு

March 23, 2023 தண்டோரா குழு

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (32). இவரது கணவர் சிவா.கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக கோவை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

இதனிடையே கோவை குற்றவியல் நீதிமன்றம் 2ல் கவிதா இன்று விசாரணைக்காக வந்திருந்தார். அப்போது கணவர் சிவாவும் நீதிமன்றம் வந்துள்ளார்.பின்னர் கவிதா விசாரணை முடிந்து வெளியே வந்த போது நீதிமன்றம் அருகே கணவர் சிவா தண்ணீர் பாட்டிலில் கலக்கி வைக்கப்பட்டிருந்த சல்பியூரிக் அமிலத்தை கவிதா முகத்தில் ஊற்றினார். இதில் காயம் அடைந்த கவிதா அலறி துடித்தார்.

பின்னர் வக்கீல்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவாவை வக்கீல்கள் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவிதா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க