• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை புரோசோன் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ – அசத்திய அழகிகள்

March 20, 2023 தண்டோரா குழு

கோவை சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டியில் அமைந்துள்ளது புரோசோன் மால். இங்கு உலக மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாவ் ஒண்டர் உமன் என்ற பெயரில் மகளிர் பங்கேற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியன் பிளவர் நிறுவனத்துடன் இணைந்து ப்ரோ ஜோன் மால் இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியை நடத்தியது. இன்று நடைபெற்ற கிராண்ட் பைனல் முதல் போட்டியில் 10 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆடைகளை அணிந்து நடந்து வந்தனர். 16 வயது முதல் 26 வயது வரை உள்ள கல்லூரி மாணவிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் வந்தனர். மூன்றாவது போட்டியில் 26 வயது முதல் 40 வயது வரை உள்ள இல்லத்தரசிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புரோசோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பி. பாபு, செயலியக்க தலைவர் முசாமில், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் சி.முரளி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் படிக்க