• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமியை திருமணம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை

March 18, 2023 தண்டோரா குழு

கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த 23 வயதான வாலிபர் கூலி தொழில் செய்து வந்தார். இவர்கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்ததுடன், அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

பின்னர் அந்த சிறுமிக்கு பிரசவ வலி வந்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போதுதான் அந்த சிறுமிக்கு 16 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் கோவை கிழக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த வாலிபர் சிறுமியை திருமணம் செய்துடன் அவரை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக கோவையில் உள்ள போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரஷீதா ஆஜராகி வாதாடினார்.

மேலும் படிக்க