• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தாய் திட்டியதால் சிறுமி 13வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை

March 8, 2023 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் டி பிளாக் 13வது மாடியில் No-311ல் வசிப்பவர் மோகன் – சூர்யா தம்பதியினர். மோகன் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களது 17 வயது மகள் அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்வில் பங்கேற்க தயாராகி வந்தார்.

இந்த நிலையில் ஹால் டிக்கெட் பெற நேற்று 12 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்ற சிறுமி, பொது தேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்கி கொண்டு இரவு 08:45 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தாயார், ஏன் இவ்வளவு லேட் ஆக வந்த ? என்று கேட்டு திட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுமி 13 வது மாடியில் இருந்து இரவு கீழே குதித்து விட்டார்.தலை, கை, கால்கள் மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுமியை உடனடியாக அழைத்து சென்று, தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனை அறித்த துடியலூர் போலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டனர்.தாய் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்த சிறுமியால் குடும்பத்தார் , உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

மேலும் படிக்க