• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.எஸ்.டி. எண்ணை தவறாக பயன்படுத்தி பணம் பெற்று மோசடி செய்தவர் கைது

March 6, 2023 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த கண்ணன் என்பவர் மஹாலஷ்மி ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர் தங்கள் நிறுவனத்தின் ஜி.எஸ்.டி. எண்ணை யாரோ தவறாக பயன்படுத்தி பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.

இது தொடர்பாக சீனிவாசன் (47) என்பவரை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர்கள் சிவகுமார், சிவராஜ பாண்டியன் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சீனிவாசன் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.அவரிடம் இருந்து மொபைல் போன்கள்,மின்னணு சாதனங்கள் பல்வேறு சிம்கார்டுகள், பல்வேறு நிறுவனங்களின் பெயரில் உள்ள விசிடிங் கார்டுகள் சுமார் – 1500, போலி ரூபாய் தாள்கள் – மதிப்பு சுமார் 5000 ரூபாய், போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்மாறும் போலீஸாரால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க