• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஷன் அரிசி கடத்தல் : சிறுவன் உட்பட விற்பனையாளர் கைது – நான்கு சக்கர வாகனம் பறிமுதல்

February 28, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது கோவை சரவணம்பட்டி சேரன் மாநகர் விளாங்குறிச்சி சாலையில் ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது.

மேலும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த காளப்பட்டியைச் சேர்ந்த சபரி ராஜனிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் காளப்பட்டியைச் சேர்ந்த பாபு மற்றும் விற்பனையாளர் கோபாலன் என்பவர் உதவியுடன் இந்தக் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதை கேரளா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தது ஒப்புக் கொண்டனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி கார், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து மேலும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க