• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

February 24, 2023 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள ஜெயலலிதா,எம்ஜிஆர், அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். பின்னர் இதய தெய்வம் மாளிகையில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.கோவை முன்னாள் மேயர் சேம.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க