• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் போராட்டம்

February 22, 2023 தண்டோரா குழு

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவர்கள்போராட்டம் நடத்தினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மாணவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்.காரணம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை திரும்ப கல்லூரியில் சேர்க்க வேண்டும்.சட்டக் கல்லூரியில் ஹாரிதா என்ற மாணவி கல்லூரியில் சேரும் பொழுது கொடுத்த டிசி காணவில்லை என்று கல்லூரி சார்பாக தெரிவித்து உள்ளனர் ‌.அதையடுத்து மூன்றாம் ஆண்டு படித்துவரும் சேக் முகம்மது என்ற மாணவர் கல்லூரிக்கு சென்று கல்லூரி ஊழியர்களை தகாத வார்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் ஷேக் முகமது மற்றும் ஹாரிதா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது. இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணிஸ் என்ற மாணவனை காரணம் இன்றி சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாகநேற்று சட்டக் கல்லூரி வளாகத்தில் முன்பு மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து விதமான சஸ்பெண்ட் ஆணையை திரும்ப பெற வேண்டும். மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும், ‘விசாரணை குழுவில்’ மாணவர்கள் சார்பாக மாணவர்கள் இருக்க வேண்டும்.இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது இதைக் காரணம் காட்டி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க