• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டி-யால் இந்தியாவின் அடையாளமான குறுந்தொழில்கள் கடுமையான பாதிப்பு

February 20, 2023 தண்டோரா குழு

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம் காஸ்மாபேன் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ஜேம்ஸ், சிவ சண்முககுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 20 தொழில் அமைப்புகளின் தலைவர்கள்பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:

குறுந்தொழில்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.குறுந்தொழில்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசாங்கம் தனி அமைச்சகத்தை ஏற்படுத்திட வேண்டும. பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்ற குறுந் தொழில்களில் ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடிகளை தீர்ப்பதற்கும்,நாடு முழுவதும் குறுந்தொழில்கள் வளர்ச்சி காண்பதற்கும் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். புதிய அமைச்சகம் ஏற்படுத்துவதன் மூலம் குறுந்தொழிலுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழி காட்ட வேண்டும்.

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பின்பு இந்தியாவின் அடையாளமான குறுந்தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. பெருந் தொழிலுக்கு இணையான ஜிஎஸ்டி வரி விதிப்பால்,குறுந்தொழில்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது.ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நெருக்கடிகளை தீர்ப்பதற்கு குறுந்தொழிலுக்கு தனி ஜிஎஸ்டி அமலாக்கம் செய்ய வேண்டும்.

குறுந்தொழில்களுக்கு தனி வட்டி விகிதங்கள் அறிவிப்புகள் வெளியிட வேண்டும். விவசாயத்துக்கு வழங்குகின்ற வட்டி விகிதத்தை போல் குறுந்தொழில்கள் வளர்ச்சி காண வட்டி விகிதங்கள் வழங்க வேண்டும்.மிகப்பெரும் தொழில் வளர்ச்சி கண்ட கோவை மாவட்டம் தொடர்ந்து பெரும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மேம்பட மத்திய, மாநில அரசுகள் கோவையில் பெரும் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கும், தனியார் தொழிற்சாலைகளை ஏற்படுத்தித் தருவதற்கும் முழு முயற்சி எடுக்க வேண்டும். அதன் மூலம் ஜாப் ஆர்டர்கள் பெறுவதற்கும், உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், வழி காட்ட வேண்டும்.

தமிழ்நாடு அரசு மின் கட்டணம் உயர்த்திய பின்பு தொழில் முனைவோர்கள் மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிப்பு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க