• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது -34.4 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

February 18, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் துடியலூர் பகுதியில் தொடர் வீடு புகுந்து திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த நபர்களை விரைந்து கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

இதன் பேரில் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை செய்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் தொப்பம்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர்களை விசாரணை செய்ததில் துடியலூர் பகுதிகளில் வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்தவர்கள் என தெரியவந்தது.

கோவில்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்ற திவான் (20), அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (55) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் (31) ஆகிய மூன்று நபர்கள் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதனை அடுத்து காவல்துறையினர் அந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 34.4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க