• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ25 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை – பி.ஆர்.நடராஜன் எம்பி., திறந்து வைத்தார்

February 16, 2023 தண்டோரா குழு

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய ரேசன் கடை கட்டிடத்திற்கு ரூ25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் நிறைவுற்று இதன் திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. இதனை பி.ஆர்.நடராஜன் எம்பி., திறந்துவைத்தார்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணபதி காமராஜபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் புதிய ரேசன் கடைக்கான கட்டிடம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, பி.ஆர்.நடராஜன் எம்பி., புதிய ரேசன் கடைக்கான கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், ரேசன் கடைக்கான புதிய கட்டிடத்தை வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையாளர் மகேஸ் கண்ணன், உதவி பொறியாளர் சரவணக்குமார், கணபதி 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைரமுருகன்,12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வெ.இராமமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன், வடக்கு நகரச்செயலாளர் சுந்தரம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, திமுக பிரமுகர்களும், பொதுமக்களும் திரளானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க