• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போலீசார் அதிரடி சோதனையில் 801 மதுபாட்டில்கள் பறிமுதல்

January 17, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் நேற்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.இதை அடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 230க்கும் மேற்பட்ட டாஸ்மாக் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

இதனை அடுத்து மது விற்பனையில் யாரேனும் ஈடுபடுகிறார்களா? என கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 269 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே போல் பேரூரில் 4 வழக்குள் 51 மது பாட்டில்கள், கே.எம்.பட்டியில் 12 வழக்குகள் 81 மது பாட்டில்கள்,பொள்ளாச்சியில் 15 வழக்குகள், 217 மது பாட்டில்கள்,வால்பாறையில் 8 வழக்குகள் 92 மதுபாட்டில்கள், மேட்டுப்பாளையத்தில் 10 வழக்குகள் 91 மது பாட்டில் என மொத்தம் 62 வழக்குகளில் 801 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க