• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடல் உறுப்பு தானம் செய்ய முன் வரவேண்டும்,விழிப்புணர்வு ஏற்படுத்திய பிஎஸ்ஜி மருத்துவமனை

January 12, 2023 தண்டோரா குழு

மூலை சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்பு தானம் மூலம் ஐந்து பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பிஎஸ்ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,

தமிழகத்தில் விபத்துகள் தடுக்கப்பட வேண்டும்,விபத்தின் போது மூளை சாவு என்ற ஒரு கட்டம் வரும் பொழுது, அந்த குடும்பத்தார்கள் மூளை சாவு அடைந்த நபர்களின் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என கேட்டு கொண்டனர்.

குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருவரின் உடல் உறுப்பு தானம் மூலம், இருதய நோயாளிகள், கல்லீரல் நோயாளிகள்,சிறுநீரக பழுதுபட்ட நோயாளிகளுக்கு என மொத்தம் ஐந்து நபர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யபட்டு தற்போது முழு குணமடைந்து வீட்டிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சையும், குறைந்த அளவிலான கட்டணங்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிவித்த அவர் உடல் உறுப்பு தானம் குறித்து மக்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் வெங்கடகிருஷ்ணன், இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரதீப்,இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அனந்தநாராயணன்,மயக்க மருந்து நிபுணர் சிவக்குமார், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவர் வேணு, மருத்துவர்கள் பிரசாந்த், கணேஷ், சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர்கள் வசந்த்,அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க