• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாநில அளவிலான தடகள போட்டிகள்

January 6, 2023 தண்டோரா குழு

கோவை பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.

கோவை பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாநில அளவிலான தடகள போட்டிகள் வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்றது. ஆடுகளம் 2022 எனும் தலைப்பில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர். தங்கவேலு தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பிசியோதெரபி கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சென்னை கோவை மதுரை திருச்சி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் தடகளம், தொடர் ஓட்டம்,நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், கூடை பந்து,கபடி, கால்பந்து என முப்பதுக்கும் அதிகமான பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆர்.வி.எஸ்.சுகாதார அறிவியல் கல்லூரி செயலாளர் நாகராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க