• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய தலைவர் நட்டாவின் சுற்றுப்பயணத்தால் பாஜக விற்கு மிகப்பெரிய விஜயம் அமையும்- அண்ணாமலை

December 27, 2022 தண்டோரா குழு

டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் டவுன்ஹால் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வந்த அவர்களுக்கு பாஜகவினர் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.(இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் வருவதற்கு காலதாமதமானதால் அவர் பங்கேற்க இயலவில்லை). பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அண்ணாமலை, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக இருந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட பனி மூட்டத்தின் காரணத்தினால் அவரது வருகை காலதாமதம் ஆனதாகவும் எனவே தாங்கள் கோவிலுக்கு வந்து தமிழக மக்கள் இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.

தேசியத் தலைவர் வந்தவுடன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் இன்று மாலை மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் உள்ளதாகவும் கூறினார். தேசியத் தலைவர்கள் வந்தால் அதிமுக தலைமையினர் வழக்கமாக சந்திப்பார்கள் ஆனால் இம்முறை யாரும் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளித்த அண்ணாமலை அதிமுகவை பொறுத்தவரை முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டு அவர்களது கூட்டத்தை நடத்தி வருவதாகவும் பாஜகவினரின் நிகழ்ச்சி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தான் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.

பாஜக தேசியத் தலைவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் அதன் முதல் பயணத்தை குறிப்பாக கோவை நீலகிரியில் இருந்து துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார். பாஜக எந்த அளவிற்கு வலுப்பெற்றுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை பாஜகவை பொறுத்தவரை ஏற்கனவே கோவையில் ஒரு எம்எல்ஏ உள்ளதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருவதாகவும், அங்குள்ள அடிப்படை குறைகளை பெரும் அளவுக்கு தீர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இப்பகுதி பாஜகவை அதிக மக்கள் சார்ந்துள்ள தேசியம் மிகுந்த பகுதி என தெரிவித்த அவர் மிகப்பெரிய விஜயம் அமையும் என தெரிவித்தார்.முன்னதாக எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் கோவில் பகுதியில் 100க்கும் மேற்பட்ட் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட் புத்தக கடைகள் துணிக்கடைகள் அடைக்கப்பட்டன.

மேலும் படிக்க