• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் PSGR கிருஷ்ணம்மாள்மகளிர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

December 24, 2022 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும்( TNAU ) PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்த்தம் ( MoU ) 24.12.2022 அன்று கையெழுத்தானது.

உயிர்த் தொழில்நுட்பம்,உணவு பதப்படுத் துதல் மற்றும் தொலையுனர்வு தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய ஆராய்ச்சிகளும் மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாடு,தொழில் முனைவோர் பயிற்ச்சி ஆகிய வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டில் இணைந்து செயல்பட இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில்,பதிவாளர்முனைவர் ஆர்.தமிழ்வேந்தன் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளீர் கல்லூரி சார்பில், முனைவர் பி.மீனா,வேளாண் துணைவேந்தர் முனைவர் வி.கீதாலட்சுமி பல்கலைக்கழகத்தின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர் முனைவர் இ.சோமசுந்தரம்
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்தார் .

மேலும் படிக்க