• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா

December 19, 2022 தண்டோரா குழு

தளபதி விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக நடைபெற்ற மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவில், கேக் வெட்டி புத்தாடைகள்,கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தளபதி மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசணையின் படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி,ரம்ஜான்,பொங்கல்,கிறிஸ்துமஸ் என ஒவ்வொரு பண்டிகை கால நேரங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்பட்டது.

விஜய் மக்கள் இயக்க கோவை மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில்,மாவட்ட தொண்டரணி தலைவர் விக்கி கலந்து கொண்டு புத்தாடைகள், மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்..நிகழ்ச்சியில் முன்னதாக கேக் வெட்டி அனைவரும் இணைந்து கிறிஸ்தவ பாடல்களை பாடினர்.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட பொருளாளர் இரத்தினபுரி ராஜா மாவட்ட பொறுப்பாளர் பஷீர் மாவட்ட துணை தலைவர் மாரிராஜ் துணைச்செயலாளர் ஆஷிக்முகமது இணை செயலாளர் சதீஷ்குமார் இணைச்செயலாளர் அருண் குமார் அமைப்பாளர் செந்தில் துணை அமைப்பாளர் சரவணன் ஆலோசகர் ரோஹித் கிரேஸ் மாவட்ட தொண்டரணி பொருளாளர் அருண்பாண்டியன் சுந்தராபுரம் பரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க