• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம்

December 15, 2022 தண்டோரா குழு

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மாநகர காவல் ஆணையார் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரோட்டரி கிளப்ஸ் ஆஃப் கோயம்புத்தூர் ரீஜன் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை தொடங்கினர்.இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பயணமானது 6 இருசக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டு வில் முடிவடைகிறது. இதற்காக 14 நாட்களில் 7000 கிமீ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய ரைடர்கள்,

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது குறிப்பாக செயலி மூலம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேபால் செல்வதாகும் செல்லும் வழியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் செல்வதாக கூறினர்.

மேலும் படிக்க