• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்தேச, தேசிய அளவில் காரத்தே போட்டிகளில் பதக்கங்களை வென்ற கோவை வீரர்கள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

December 13, 2022 தண்டோரா குழு

சர்வதேச, தேசிய அளவில் நடைபெற்ற காரத்தே போட்டிகளில் கோவை காரத்தே வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதகங்களை குவித்தனர். கோவை கலெக்டர் சமீரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சர்வதேச அளவில் இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும், அகில இந்திய அளவில் மண்டலங்களுக்கு இடையேயான கராத்தே போட்டிகளிலும், அகில இந்திய சப் ஜூனியர் கராத்தே போட்டிகளிலும் கோவையை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு பதகங்களை குவித்தனர்.இதில் சர்வதேச அளவில் கோவையை சேர்ந்த மாணவி சஞ்சனா(16) தங்க பதக்கம் வென்றார். தேசிய அளவில் தக்ஷத்தா (15) வெள்ளி, நாகேந்திரன் (21) வெண்கலம், கிருத்திகா (17) வெண்கலம், மித்ரா(13) வெண்கலம் பதக்கங்களை வென்றனர். இவர்கள் அனைவரும் கோவை மாவட்ட காரத்தே சங்கத்தை சேர்ந்த வீரர்கள் ஆகும்.

இவர்கள் அனைவரும் கோவை மாவட்ட காரத்தே சங்க தலைவர் வி.எம்.சி. மனோகரன், செயலாளர் முத்துராஜ், பயிற்சியாளர்கள் சிவசிண்முகம், தர்ஷன் தயான்ந், விக்னேஷ் ஆகியோருடன் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் கோவை மாவட்ட காரத்தே சங்கம் சார்பாக கோரிக்கை மனு ஒன்று கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது. அதில், கோவை மாவட்டத்தில் இருந்து காரத்தே போட்டிகளுக்கு செல்லும் வீரர்கள் சர்வதேச,தேசிய அளவில் பதக்கங்களை வெல்கின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க